/* */

"சிறை சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ" அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு

போக்ஸோ சட்டத்தில் கைதாகி சிறை சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது - மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குமரிமாவட்ட அதிமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சிறை சென்று திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ  அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து ஆளும்கட்சி என்ற பெயரில் அராஜக செயல்களில் ஈடுபட்டு கழகத்திற்கும் கழக நற்பெயருக்கும் தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தியதால் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உத்தரவுப்படி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே தனது 56 வயதில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றார், சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள நாஞ்சில் முருகேசன் மீண்டும் அதிமுக கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தது விட்டதாக பலரிடம் கூறியதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் ஆகியோர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த அதிமுகவினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன் அதிமுக கொடியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதோடு அதிமுகவின் இணைந்து விட்டதாக கூறும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 6 Feb 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்