இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம்

இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம்
X
இஸ்ரோவில் எந்த புதிய திட்ட பணிகளையும் தொடங்கும் முன் தான் பிறந்து வளர்ந்த, தனது சொந்த ஊரில் உள்ள, பத்ரகாளி அம்மன் கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது இஸ்ரோ தலைவர் சிவனின் வழக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து அரசு கல்லூரியில் பயின்று இன்று இஸ்ரோவின் தலைவர் எனும் உயர் பதவியை பெற்றவர் இஸ்ரோ தலைவர் சிவன்.

பொதுவாக இஸ்ரோவில் எந்த புதிய திட்ட பணிகளையும் தொடங்கும் முன் தான் பிறந்து வளர்ந்த, தனது சொந்த ஊரில் உள்ள, பத்ரகாளி அம்மன் கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்வது இஸ்ரோ தலைவர் சிவனின் வழக்கம், இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று திடீரென தனது சொந்த கிராமம் ஆன சரக்கல்விளை கிராமம் வந்து அங்கு அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இஸ்ரோ தலைவர் வருகையையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதோடு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!