நாகராஜா கோயிலில் தை திருவிழா கொடியேற்றம்

நாகராஜா கோயிலில் தை திருவிழா கொடியேற்றம்
X

நாகர்கோவிலில் உள்ள புகழ் பெற்ற நாகராஜா கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. திருவல்லா பரம்பூர் இல்லம் நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி தந்திரி பூஜை செய்து திருக்கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயசந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ள இவ்விழாவின் 9 ஆம் திருநாளான ஜனவரி 28ஆம் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai future project