நாகர்கோவிலில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

நாகர்கோவிலில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
X

நாகர்கோவிலில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 104 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு குமரி மாவட்ட அதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன் தலைமையில் கூடிய அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!