விண்வெளியில் நடப்பது போன்று குமரி சாலையில் நடந்த வாலிபர்: வீடியோ வைரல்

விண்வெளியில் நடப்பது போன்று குமரி சாலையில் நடந்த வாலிபர்: வீடியோ வைரல்
X

குமரியில் குண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர்கள் போன்று உடையணிந்து நடந்து செல்லும் வாலிபர்.

விண்வெளியில் நடப்பது போன்று குமரி சாலையில் நடந்த வாலிபரின் வீடியோ வைரல் ஆகி அனைவர் கவனத்தை ஈர்த்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் ஒருவர் விண்வெளி வீரர்கள் போல் உடையணிந்து இரவு குண்டும் குழியுமான சாலையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை கடந்த 5-வருடத்திற்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் அதிகரித்து வருகிறது, மேலும் வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க கோரி நெட்டிசன்கள் சாலையை பல்வேறு கோணங்களில் சித்தரித்து மீம்ஸ்களுடன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர் அந்த வகையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர்கள் அணியும் உடைபோன்று உடையணிந்து நடந்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்

பின்னர் அந்த வீடியோவை "இரவு நேர காட்சி விண்வெளி அல்ல" நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மாதிரி வீடியோ என நாகர்கோவில் என்னும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே அச்சு அசல் விண்வெளி போல காட்சி அளிக்கும் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்