குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க முயற்சி: இளைஞர் கைது
லெனின்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் இரணியல், வாழோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் ஆனது சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென ரயிலில் அதிர்வை உணர்ந்த ரயில் ஓட்டுநர், அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாறையானது ரயிலில் மோதி துண்டுதுண்டாக கிடந்துள்ளது. இது தற்செயலாக விழுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் ரயிலை கவிழ்க்க முயற்சி நடைபெற்றதாக கருதப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ரயில் தண்டவாளத்தில் இருந்த பாறையை ரயிலானது உடைத்துக் கொண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் இணைந்து சம்பவ இடத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் லெனின் என்ற 22 வயது இளைஞரை நாகர்கோவில் ராயில்வே போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் எதற்காக அவர் பாறையை ரயில் தண்டவாளத்தில் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சித்தார் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu