குமரியில் உலக ஓசோன் தின பொது நல விழிப்புணர்வு
குமரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பூமியில் மரம் வளர்ப்போம் விண்வெளியில் ஓசோனை காப்போம் இயற்கை சூழலை மீட்டெடுப்போம் என்ற குறிக்கோளுடன் குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம், அரசின் ஒத்துழைப்புடன், பல்வேறு பொதுநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரியில் ஓசோன் மண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொது நல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பொது மக்களுக்கு கொரோனா நோய்க்கிருமி பற்றிய விழிப்புணர்வும், அரசின் நோய்த் தடுப்பு வழிமுறைகளையும் விளக்கப்பட்டது.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு, குளிர்ச்சி மற்றும் அதிக ஆக்ஸிஜன் தரக்கூடிய மரக் கன்றுகள் மற்றும் முகக் கவசங்கள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu