பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி

பணியில் உயிரிழந்த  ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி
X

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

பணியின் போது உயிரிழந்த குமரி ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

இந்திய ராணுவத்தில் பணியின் போது நாட்டிற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் கருணை அடிப்படையில் அரசு பணிகளை வழங்கி வருகிறது.

அதன் படி ராணுவத்தில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் வாரிசுகளுக்கு இன்று கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதன் படி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், அடைக்காக்குழியை சார்ந்த அனில்குமார் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி விஜிலா மற்றும் கிள்ளியூர் வட்டம், கிராத்தூர் பகுதியை சார்ந்த டேவிட் ராஜ் என்பவர் வாரிசுதாரரான அவரது மனைவி மேபல்பாய் ஆகியோருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

Tags

Next Story