குமரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை

குமரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை
X

பிரபின் ஸ்டான்லி.

குமரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கல்வெட்டான்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பிரபின் ஸ்டான்லி. 27 வயதான இவர் படிப்பை முடித்துவிட்டு சரியான வேலை ஏதும் கிடைக்காததால் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்து உள்ளனர்.

இதனையடுத்து பிரவின் ஸ்டான்லி பெண் வீட்டார் தன்னை தாக்கியதாக கூறி கருங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் காவல்நிலையம் வரவழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் வருத்தமடைந்த பிரவின் ஸ்டான்லி தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்த்துவிட்டு வருவதாக தாயாரிடம் கூறி சென்றுள்ளார்.

காலையில் சென்ற அவர் இரவு கடந்த பின்பும் வீடு திரும்பாத நிலையில் பிரபின் ஸ்டான்லியின் தாயார் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே தூக்கில் தொங்கியபடி நின்றுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் தனது மூத்த மகனுக்கு தகவல் சொல்லி உள்ளார் உடனே அங்கு வந்த அவர் பிரபின் ஸ்டான்லியை கீழே இறக்கி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர், இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கருங்கல் போலீசார் பிரபின் ஸ்டான்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!