குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள் துண்டிப்பு

குமரியில் ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: 13 மலை கிராமங்கள் துண்டிப்பு
X

அணைக்கள் திறப்பால் கடையாலுமூடு, பத்துகாணி உள்ளிட்ட கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது,

குமரியில் கிராமங்களில் புகுந்த காட்டாற்று வெள்ளத்தால் 13 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 உள்ளிட்ட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதன்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் தற்போது 44 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் தற்போது 74 அடியாகவும் உள்ளது.

இதே போன்று சிற்றாறு 1, 2 பொய்கை அணை உள்ளிட்ட அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது, இந்நிலையில் அணைகளில் இருந்து வினாடிக்கு 7200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அணைக்கள் திறப்பால் கடையாலுமூடு, பத்துகாணி உள்ளிட்ட கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது, மேலும் காட்டாற்று வெள்ளமானது சாலைகளையும் குடியிருப்புகளையும் ஆக்கிரமித்து உள்ள நிலையில் குமரியில் 13 மலைகிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!