பாம்பு பிடி மன்னனை பதம் பார்த்த ராஜநாகம் - வாவா சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை.

பாம்பு பிடி மன்னனை பதம் பார்த்த ராஜநாகம் - வாவா சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை.
X

பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ்

பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை ராஜநாகம் தீண்டிய நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

கேரளா மாநிலத்தில் வித விதமான பாம்புகளை ஒரு சில நிமிடங்களில் அலேக்காக பிடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் வாவா சுரேஷ்.

கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் ராஜ நாகம் ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் தகவல் வந்தது.

இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த ராஜ நாகத்தை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின்வலது காலில் கடித்தது, இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார், அதைதொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே நினைவாற்றல் இல்லாமல் இருந்த வாவா சுரேஷ்க்கு தற்போது நினைவு திரும்பி அவர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!