தொல்லியல்துறைக்கு சொந்தமான கோவில் தெப்ப குளத்தில் கலக்கும் கால்நடை கழிவுகள்
கோயில் தெப்பக்குளத்தில் கலக்கும் கால்நாடை கழிவுகள்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பார்த்தசாரதி கோவில் உள்ளது.இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் தொல்லியல்தறையின் கட்டுபாட்டிலும் இயங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது இந்த குளத்தில் திருவிழா காலங்களில் சாமி நீராடல் நடைபெறும். மற்ற காலங்களில் ஊரில் உள்ள பொதுமக்கள் குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது இந்த குளத்தில் மாட்ச்சேரி பகுதியில் இயங்கி வரும் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான பால் பண்ணையில் இருந்து வெளியேறும் கால்நடை கழிவுகள் மழைநீர் ஓடைகள் வழியாக வழிந்தோடி சாலைகளில் நடுவே தேங்கியும் மீதமுள்ள கழிவுகள் நேரடியாக கோவில் தெப்பக்குளத்தில் கலந்து வருகின்றன.
இதனால் கோவில் குளத்தின் நிறம் மாறியும் துர்நாற்றமும் வீசி வருகிறது, இதனால் குளத்தில் குளிக்கும் நபர்களுக்கு பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டு வருவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் சாலைகளின் மீதும் காலைநடை கழிவுகள் படிந்து கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது, இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் கழிவுகளில் ஓடும்போது சறுக்கல் ஏற்பட்டு விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக நடந்து வருவதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கோவில் பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த குளம் பராமரிக்கப்படாமல் போனால் வருங்காலங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் சாமி நீராடல் நிகழ்வு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
ஆகையால் தொல்லியல் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு நடத்தி குளத்தை சீர்கேடு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu