செய்வினை தீர்ப்பதாக கூறி மாணவியிடம் அத்துமீறல்: மந்திரவாதி போக்சோவில் கைது

செய்வினை தீர்ப்பதாக கூறி மாணவியிடம் அத்துமீறல்: மந்திரவாதி போக்சோவில் கைது
X

குமரியில் பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுப்பட்ட மந்திரவாதி சேகர்.

குமரியில் செய்வினை கோளாறு தீர்ப்பதாக கூறி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மந்திரவாதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் இரண்டு மகள்களில் மூத்த மகள் பதினொன்றாம் வகுப்பும் இளையமகள் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இதில் இளைய மகளுக்கு அடிக்கடி உடல் நல கோளாறு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகாத நிலையில் உறவினர் ஒருவர் கூறியதன் பேரில் பேச்சிபாறை மணலோடை பகுதியில் சேகர் என்ற மந்திரவாதியிடம் மூத்த மகளோடு சென்றுள்ளார் கூலி தொழிலாளி.

அப்போது பில்லி சூனிய செய்வினை கோளாறு இதை தீர்க்க பூஜை செய்ய வேண்டும் என கூறி எனது வீட்டில் இரண்டு மகள்களில் ஒருவர் தங்கி விடிய விடிய பூஜை செய்ய வேண்டும் என கூறி உள்ளார். மூத்த மகளை தனியாக பூஜை செய்ய அனுப்பியபோது மந்திரவாதி நான் கூறியவாறு ஒத்துழைக்காவிட்டால் சூனியம் வைத்து குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பயந்த மாணவி நடந்ததை கூறாமல் இருந்துள்ளார். சில தினங்களில் மாணவிக்கு வயிறு வலி வரவே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மாணவி கர்பமாக இருப்பது தெரியவந்தது. பூஜை செய்வதாக மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து தெரியவந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் காப்பக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் மார்தாண்டம் மகளிர் காவல்நிலைய போலீசார் மந்திரவாதி சேகரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு இவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in retail