குமரியில் நவ.15ல் முன்னாள் படைவீரர்கள் குறை தீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

குமரியில் நவ.15ல் முன்னாள் படைவீரர்கள் குறை தீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

ன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.

குமரியை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என குமரி ஆட்சியர் தகவல்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீரர்களை இழந்த விதவையர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி காலை 9 மணி அளவில் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் படை வீரர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் நேரில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story