போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 4669 நபர்கள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 4669 நபர்கள் மீது வழக்கு
X

குமரியில் வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது பாேலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

குமரியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 4669 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பது கள ஆய்வில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி குமரியில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இன்றியும், உரிய ஆவனங்கள் இன்றியும், அதிக பாரம் ஏற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 4669 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரியில் கடந்த 70 நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி