இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்து - கண் மருத்துவர் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்து - கண் மருத்துவர் உயிரிழப்பு
X
இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதால் கண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பலி.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜாபர்( 24 ), இவர் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஜாபரின் வாகனம் திருத்துவபுரம் பகுதியில் உள்ள அபாயகரமான வளைவில் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டதில் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இது குறித்த வீடியோ பதிவாகி இருந்த நிலையில் தற்போது பதப்பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த களியக்காவிளை போலீசார் மருத்துவரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!