கடன்தொல்லை: கன்னியாகுமரியில் இளைஞர் தற்கொலை

கடன்தொல்லை: கன்னியாகுமரியில்  இளைஞர்  தற்கொலை
X
குமரியில் கடன் தொல்லை காரணமாக சர்வதேச சுற்றுலா தளத்தில் வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்த போஸ் என்பவரது மகன் 35 வயதான ஜெகதீஷ் சந்திரபோஸ், சுவாமியார்மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவருக்கு ஜெல்னா பிரியங்கா என்ற மனைவியும் ஜேன்ஜேகிரிஸ், ஜேக்ஜேஹேலிஸ் என்ற இருமகன்களும் உள்ளனர்.

கடன் தொல்லையால் தத்தளித்த ஜெகதீஸ் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார், இந்நிலையில் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஆசியாவிலேயே உயர்ந்த மற்றும் நீளமான மாத்தூர் தொட்டி பாலத்திற்கு வந்தவர், அங்கிருந்து தொட்டிபாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென பாலத்திலிருந்து கீழே குதித்த ஜெகதீஷ், பாறையில் மோதி தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார், மாத்தூர் தொட்டிபாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து உயிரிழந்தது, குறித்து அப்பகுதியினர் திருவட்டார் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர், பின்னர் தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி