ரப்பர் ஆலையால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ரப்பர் ஆலையால் சுகாதார சீர்கேடு:  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

வெள்ளங்கோடு பகுதியில் செயல்படும் ரப்பர் ஆலை.

குமரியில், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ரப்பர் ஆலையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த வெள்ளங்கோடு பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனிநபர் ஒருவரால் ரப்பர் சீட்டுகளை உலர வைக்கும் ஆலை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் சுவாசக்கோளாறு தொற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மேலும், அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர், ஆனால் அந்த ஆலையை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து முறையாக அனுமதி பெறாமல் அந்த ஆலை இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த ரப்பர் ஆலையை உடனடியாக அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story