/* */

குமரி அருகே நகை கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

குமரியில் நகைகடையை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதில் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமரி அருகே நகை கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
X

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை இயங்கி வருகிறது, இன்று காலை கடையை திறக்க வந்த ராஜகோபால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்ததில் இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளையர்கள் இருவர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதே போன்று அப்பகுதியில் விஷ்வம்பரன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு நகைகடையிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த இரு கடைகளிலும் சேர்த்து 15 பவன் நகைகள் கொள்ளையடிக்கபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து குளச்சல் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கராமன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தனிபடை அமைத்து தேடிவருடின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்திரவிளை சந்திப்பிலுள்ள தனியார் ஏடிஎம் மையத்தை உடைக்க முயற்சித்து கொள்ளையர்களை காவல்துறை தேடி வரும் நிலையில் மீண்டும் நிந்திரவிளை சந்திப்பில் நகைகடையில் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் வியாபாரிகள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 13 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...