மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.

மண்ணெண்ணெய் கிடைக்காமல்  ஏமாற்றம் : ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை.
X
நாட்டுப் படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை.

மானிய விலை மண்ணெண்ணெய் கிடைப்பதில் சிரமம் நீடிப்பதாக கன்னியாகுமரி, கிள்ளியூர் பகுதி மீனவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரோக்கியபுரம் கடற்கரை கிராம மீனவர்கள் மானிய விலை மண்ணெண்ணெய் வாங்க சின்னமுட்டம் துறைமுகம் வரும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஆரோக்கிய புரம் கிராம மீனவர்கள் மண்ணெண்ணெய் வாங்க சின்னமுட்டம் வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் சென்றும் மண்ணெண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வருவதால் அன்றைய தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கும் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் ஆட்சியரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story