தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு ரயிலில் வந்த 2615 டன் ரேஷன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு  ரயிலில் வந்த 2615 டன் ரேஷன் அரிசி
X

ரயிலில் வந்த ரேஷன் அரிசி ( பைல் படம்)

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2615 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் குமரி மாவட்டம் வந்தடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய கூடிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல் தெலுங்கானா மாநிலம் காக்கிநாடா பகுதியிலிருந்து 2615 டன் ரேஷன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் 42 வேகன்கள் மூலம் குமரி மாவட்டம் வந்து அடைந்தது.

தொடர்ந்து ரயிலில் வந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் உள்ள மத்திய அரசின் உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த அரிசிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

Tags

Next Story