குமரியில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தம்: சீரமைப்பு பணி தீவிரம்

குமரியில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தம்: சீரமைப்பு பணி தீவிரம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்பாதையில், குழித்துறை விரிவோடு பகுதியில் ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குமரியில் ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது, வெளியூர் ரயில்களும் பாதியில் நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்பாதையில், குழித்துறை விரிவோடு என்ற இடத்தில் மின்கம்பி அறுந்தது. திடீரென மின்கம்பி அறுந்ததால் ரயில்களை இயக்குவத்திலும் சிக்னல் பெறுவதிலும் தடை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையேயான மதுரை -கொல்லம், குரூவாயூர் -சென்னை, நாகர்கோவில்-மங்களூர் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

மேலும் 3 சிறப்பு இரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!