சமூக விரோதிகளால் அரசு பள்ளி சேதம்: சீரமைக்க பாெதுமக்கள் காேரிக்கை
கன்னியாகுமரிமாவட்டம் ஈசாந்திமங்கலம் அருகே சமூக விரோதிகளால் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ள அரசு பள்ளி.
கன்னியாகுமரிமாவட்டம் ஈசாந்திமங்கலம் அரசு பள்ளி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி கடந்த சில மாதங்களாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இங்கு படித்த மாணவ மாணவிகளில் பலர் அரசு வேலையில் உள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு வரை 700 மாணவர்கள் படித்த பள்ளியில் தற்போது இந்த 200 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதற்கு காரணம் இப்பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துவதோடு மட்டுமல்லாமல் பாட்டில்களை அங்கேயே உடைத்து போடுவதக்கவும், இடியும் தருவாயில் பள்ளி கட்டடங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் பள்ளி சுத்தம் செய்யப்படாததால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் கால்களில் மதுபாட்டில்கள் குத்தி மாணவ, மாணவிகளின் கால்களில் காயம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே இந்தப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்கி வரும் நிலையில் தமிழக அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த பள்ளியை சீரமைக்க ஊர் பொதுமக்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்தால் இன்னும் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படிக்க முன்வருவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu