குமரியில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் பொதுமக்கள் அவதி.

குமரியில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் பொதுமக்கள் அவதி.
X

கனமழை காரணமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் குமரி மாவட்ட சாலைகள் 

குமரியில் ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறி உள்ளன

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில சாலைகள் தேசிய சாலைகள் என அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறி உள்ள நிலையில் இதில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறிய நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் பாதாள குழிகளாக மாறி உள்ளன.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகள் அரங்கேறி வரும் நிலையில் தனியாக செல்லும் நபர்களே பயத்துடன் வாகனங்களை ஓட்டி வரும் நிலையில் குடும்பத்தினருடன் வாகனங்கள் செல்வது இயலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வருகிற மார்ச் மாதம் 5 ஆண்டுகள் முடிவடைந்த சாலைகள் மீண்டும் சீரமைக்க நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால் ஒரு சில மாதங்களில் அனைத்து சாலைகளும், புதிய சாலைகளாக மாறிவிடும் என அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.

ஆனால் சாலைகள் என்பது அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் குறிப்பிட்ட நாட்கள் வரை சாலைகளை அப்படியே படாமல் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture