குமரி மாவட்டத்தில் தரமற்ற தாலுகா அலுவலக கட்டுமான பணி - தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.
தரமற்ற தாலுகா அலுவலக கட்டுமான பணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த காலத்தில் விளவங்கோடு தாலுகாவுடன் இருந்த முன்சிறை ஒன்றிய பகுதிகள் மற்றும் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாக கிள்ளியூர் தாலுகாவாக உருவாக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தனி தாலுகா உடுவாக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் புதிதாக தாலுகா அலுவலக கட்டிடம் அமைக்கபடாமல் தற்காலிக பழைய கட்டிடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தமிழக அரசால் 3 கோடியே 5 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே புதிய கட்டிடம் கட்டும் பணி தரமற்ற முறையில் நடந்து வருவதாகவும் கட்டிடம் கட்ட பயன்படுத்தும் செங்கற்கள் முழுவதும் களிமண் போன்று இருப்பதாகவும் இந்த கற்கள் கொண்டு அலுவலகம் கட்டபட்டால் கட்டிடத்திற்கு நீண்ட ஆயூள் இருக்காது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பயன்பாட்டுக்கு வரும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது எனவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிடம் கட்டும் பணியாளர்களிடம் சென்று தரமான முறையில் பணியை செய்தால் மட்டும் தொடர்ந்து பணி செய்தால் போதும் இல்லை என்றால் கட்டிடம் கட்டும் பணியை நிறுத்தி விடுங்கள் எனக்கூறி பணியை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இந்த பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு அவர்கள் மேற்பார்வையில் நல்ல முறையில் தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு கட்டிடத்தை கட்ட வலியுறுத்தினர்.
இதனையடுத்து பணியாட்கள் தாங்கள் செய்து வந்த வேலையை பாதியிலேயே நிறுத்தி சென்றனர், மேலும் பொதுமக்கள் அறிவுறுத்தல் படி அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்னர் வேலையை தொடங்குவதாக அறிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu