சொத்து விற்பனையில் முன்விரோதம்: உறவினர்கள் மோதலில் கார் கண்ணாடி சேதம்

சொத்து விற்பனையில் முன்விரோதம்: உறவினர்கள் மோதலில் கார் கண்ணாடி சேதம்
X

நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மகேஷ் காரின் கண்ணாடிகளை உடைத்து விட்டு திரும்பி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன.

குமரியில் சொத்து விற்பனை செய்வதில் முன்விரோதம் காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கார் கண்ணாடி சேதம்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கோவிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் 29, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அலுவலராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டே முக்கால் சென்ட் நிலம் இவரது சித்தப்பா மகனான மகேஷ் என்பவரின் வீட்டில் அருகில் உள்ளது.

அதனை சிவகுமார் விற்பனை செய்ய முயன்ற நிலையில் அந்த சொத்தை மகேஷ் வாங்குவதற்கு கேட்டுள்ளார். அப்போது சிவகுமார் ஒரு விலையை வைத்து அதனை உடனே தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மகேஷ் சிறுக சிறுக தருவதாக கூறி உள்ளார். ஆனால் சிவகுமாருக்கு அத்தியாவசிய பணத்தேவை இருந்ததால் அந்த நிலத்தை தனது மற்றொரு பெரியப்பாவின் மகனுக்கு விற்பனை செய்ய ஒத்துக்கொண்டு முன்பணம் வாங்கி உள்ளார்.

இதை அறிந்த மகேஷ் இரண்டு தினங்களுக்கு முன் சிவகுமாரை வழிமறித்து அந்த நிலத்தை தன்னை தவிர வேறு யாருக்கேனும் விற்பனை செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று அலுவலக வேலை முடித்து வந்த சிவகுமார் அவருக்கு சோந்தமான 5 லட்சம் மதிப்புள்ள டட்சன் காரை வீட்டிற்கு அருகில் உள்ள சாலையின் ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் இடது பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார்.

அப்போது நேற்று நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மகேஷ் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து காரின் முன்பக்க மற்றும் இடது பக்க கண்ணாடிகளை உடைத்து விட்டு திரும்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து காலை வேளையில் சம்பவ இடத்திற்கு வந்த மகேஷ் காரை நான் தான் உடைத்தேன் உன்னால் முடிந்ததை செய் என்று கூறிவிட்டு சென்றுள்ளான். இது சம்பந்தமாக சிவகுமார் நித்திரவிளை போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா