குமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைப்பு

குமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைப்பு
X

 ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாண்புமிகு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் தமிழக அரசின் சார்பில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாண்புமிகு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அங்கு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து பெற்றோர்களிடம் கலந்துரையாடினார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த முகாம்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தை பெற்று சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!