போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2270 பேர் மீது வழக்கு
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைக்கவசம் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செயல்படுவதாக போலீசாரின் ஆய்வில் தெரிய வந்தது. அதன் படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பதோடு விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஒட்டிகளும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம், உரிய ஆவனங்கள் இன்றி, அதிக பாரம் ஏற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2270 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் மீண்டும் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu