இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் கைது.

இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர் கைது.
X
பாதிக்கப்பட்ட இளம் பெண், சுஜித்திடம் நேரில் சென்று கேட்டபோது சுஜித், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காஞ்சாம்புரத்தைச் சேர்ந்தசுஜித் ( 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட இளம் பெண், சுஜித்திடம் நேரில் சென்று கேட்டபோது சுஜித், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த இளம் பெண், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, இளம் பெண் அளித்த, புகார் மனு மீது உடனடி விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டு சுஜித்தை கைது செய்தனர், கைது செய்யப்பட்ட சுஜித், கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!