நெல்லையில் இருந்து குமரிக்கு புகையிலை கடத்தல் : மடக்கிய போலீசார்

நெல்லையில் இருந்து குமரிக்கு புகையிலை கடத்தல் : மடக்கிய போலீசார்
X
நெல்லையில் இருந்து குமரிக்கு புகையிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் சிறப்பு படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

போலீசார் அந்த வாகனத்தை தடுத்தபோது, அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீசார், துரத்தி சென்று மடக்கி பிடித்து வாகனத்தை சோதனையின்னர். அதில், சுமார் 95 கிலோ புகையிலை இருந்தது.

அந்த வாகனத்தில் இருந்த வள்ளியூர் மறவர்காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மந்திரமூர்த்தி 43 மற்றும் ஆலங்குளம் கீழத்தெரு பகுதியை சார்ந்த ஞானசேகர் மகன் சுரேஷ்குமார் 25 ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். குமரி மாவட்டத்தில் வினியோகம் செய்வதற்காக புகையிலை நெல்லையில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இரண்டு பேரையும் கைது செய்த ஆரல்வாய்மொழி போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா