குமரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

குமரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
X

களிங்கராஜபுரம் கிராம பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்களும் ஒன்றிணைந்து இன்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட களிங்கராஜபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில் அதனை தடுக்க அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பிற்கு படிக்க அமைக்கப்படுவதாக பொய்யான காரணத்தைக் கூறி செல்போன் டவர் நிறுவ முயற்சிப்பதாக கூறியும், ஏற்கனவே சுற்றுவட்டார பகுதியில் 2 செல்போன் டவர்கள் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் நிறுவப்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மலையோர பகுதிகளில் செல்போன் டவர் தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அங்கு செல்போன் டவர் அமைக்காமல் ஏற்கனவே செல்போன் டவர் இருக்கும் இடத்தில் மீண்டும் செல்போன் டவரை அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும்.

இதனை தடுத்து நிறுத்த கோரியும் களிங்கராஜபுரம் கிராம பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்களும் ஒன்றிணைந்து இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
latest agriculture research using ai