பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
X

மார்த்தாண்டன்துறை சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் கண்டன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குமரியில் பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

திமுக தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற உடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை 118 ஐ வெளியிட்டது.

இந்நிலையில் கொல்லங்கோடு பேரூராட்சியோடு அதன் அருகில் உள்ள இரண்டு ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளபட்டது. அதன்படி நடைபெற்ற இந்த முயற்சிக்கு ஊரக மக்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருக்கும் ஏழுதேசம் பேரூராட்சியையும் கொல்லங்கோடு பேரூராட்சியோடு இணைத்து நகராட்சியாக்கி வார்டு வரையறைகள் செய்யபட்டு நகராட்சி தேர்தலுக்கான ஆயத்தபணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கொல்லங்கோடு பேரூராட்சியோடு இருந்து வந்த 3 மீனவ கிராமங்களான மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, நீரோடி ஆகிய கிராமங்களை நகராட்சியோடு இணைக்காமல் தனி கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார். மேலும் மக்களோடு எந்த கருத்தும் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 118 ஐ திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மீனவ கிராம மக்கள், பங்கு தந்தையர்கள் ஒன்றிணைந்து கோரிக்கையை வலியுறுத்தி மார்த்தாண்டன்துறை சந்திப்பு பகுதியில் கண்டன உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கபட்டுள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil