குமரியில் ஆய்வுக்கு வந்த அதிகாரி: நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை

குமரியில் ஆய்வுக்கு வந்த அதிகாரி: நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
X

ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாமடம் பகுதியில் கிள்ளியூர் தாசில்தார் ஆய்வு மேற்கொண்ட பாேது நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

குமரியில் மழை நீரை மாற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாமடம் பகுதியில் உள்ள தாழ்வான இடத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அரசு அனுமதியுடன் வீடுகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் ஓடைகள் அனைத்தும் ஆக்ரமிப்பு செய்து வைக்கபட்டுள்ளதால் மழை காலங்களில் உயரமான பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் குமரி மாவட்டம் முழுவதும் பெய்த கன மழையில் பாலாமடம் பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.

இதனால் இப்பகுதியில் வீடுகளில் வசிக்க முடியாத மக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு அரசு முகாம்களில் தங்கி இருந்து வருகின்றனர். மாதம் 3 கழிந்த பின்பும் இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஏழுதேசம் பேரூர் நாம் தமிழர் கட்சியினர் நித்திரவிளை சந்திப்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் மழைநீர் சூழ்ந்து கிடக்கும் பாலாமடம் பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த தகவல் அறிந்த போராட்ட காரர்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டு தாசில்தார் ஆய்வு செய்யும் இடத்திற்கு கைகளில் கொடியுடன் நடந்து சென்று அவரை முற்றுகை இட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் தாசில்தாரை அழைத்து சென்று ஆக்ரமிப்புகள் நடந்திருக்கும் இடங்களை காண்பித்து இவற்றை அகற்றினாலே தண்ணீர் தேங்காமல் வழிந்தோடும் என்று விளக்கினர். இதனை தொடர்ந்து தாசில்தார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா