குமரியில் கஞ்சா விற்பனை - 210 கிலோ கஞ்சா பறிமுதல்

குமரியில்  கஞ்சா விற்பனை - 210 கிலோ கஞ்சா பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே பண்ணிபாலம் பகுதியை சேர்ந்த சுதர்சனன் என்பவரது வீட்டில் மீன் எக்ஸ்போட்டிங் செய்வதாக கூறி கேரளமாநிலம் காட்டாகடையை சேர்ந்த அகமது அனஸ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

தொடர்ந்து மனைவி என கூறி ஒரு பெண்ணும் அவரோடு தங்கி உள்ளார், இந்நிலையில் அகமது அனாசை கடந்த மூன்று தினங்களுக்கு முன் கேரள மாநில மதுவிலக்கு போலீசார் மேல்புறம் பகுதியில் வைத்து கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.இதை தொடர்ந்து அவரது மனைவி என கூறப்பட்ட அந்த பெண் வீட்டு உரிமையாளரிடம் அவர்களிடம் இருந்த சாவி தொலைந்து விட்டதாக கூறி வீட்டு உரிமையாளரிடம் இருந்த சாவியை கேட்டு பெற்று உள்ளார்.

இதை தொடர்ந்து அவரையும் அங்கு காணவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் சுதர்சனன், பூட்டப்பட்ட வீட்டை கண்காணித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு கார் பைக்குகளில் அகமது அனஸ் தலைமையில் ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.இதனை பார்த்த சுதர்சனன் அவர்களிடம் எதற்காக இங்கு இந்த நேரத்தில் வந்து இருக்கீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்யவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது.

இது குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.அப்போது வீட்டில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, போலீசாரின் விசாரணையில் இந்த கும்பல் மொத்தமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

சில்லறை வியாபாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்தும், கொரானா ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் பூட்டபட்டிருந்ததால் போதை ஆசாமிகளை குறிவைத்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் மூட்டை மூட்டையாக இருந்த 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் தப்பி சென்ற கேரளா கஞ்சா கும்பலையும் தேடி வருகின்றனர்.

Next Story
ai solutions for small business