தேசிய ஒற்றுமை தினம்: குமரி முதல் குஜராத் வரை காவல்துறையினர் பேரணி
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு குமரி முதல் குஜராத் வரையிலான இருசக்கர வாகன பேரணியை தமிழக காவல்துறை மேற்கொண்டனர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்திருக்கும் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஒற்றுமை தின விழாவில் பங்கேற்க இந்தியாவின் நான்கு திசைகளில் இருந்தும் காவல்துறை சார்பாக இருசக்கர வாகன பேரணி செல்கிறது.
அதன் ஒரு பகுதியாக தென் திசையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது, 25 இருசக்கர வாகனங்களில் 2085 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் காவல்துறையினருடன் 16 உதவியாளர்களும் செல்கின்றனர். இருசக்கர பேரணியை சிறப்பு ஆயுதப்படை கூடுதல் காவல்துறை இயக்குனர் அபய்குமார் சிங் மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
இப்பேரணியானது திண்டுக்கல், ஓசூர், ஹூப்வி, புனே வழியாக குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள பட்டேல் சிலையை வரும் 24 ம் தேதி சென்றடைகிறது. தொடர்ந்து பேரணியில் சென்றவர்கள் 31 ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu