குமரி ஆற்று கடவில் இலவச படகு வழங்கிய விஜய் வசந்த எம்.பி.

குமரி ஆற்று கடவில்  இலவச படகு வழங்கிய விஜய் வசந்த எம்.பி.
X

குமரி ஆற்று கடவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, இலவச படகை வழங்கிய விஜய் வசந்த் எம்.பி.

குமரி ஆற்று கடவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, இலவச படகை எம்.பி விஜய் வசந்த் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியம், விளாத்துறை பஞ்சாயத்துக்கு உட்பட விளாத்திவிளை ஆற்று கடவில் விளாத்திவிளையில் இருந்து - விளவங்கோட்டிற்கு செல்ல படகு சேவை இயக்கப்பட்டு வந்தது. அந்த படகு சேதமடைந்தது போனதால், பொதுமக்கள் ஆற்றில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்திடம், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தனது சொந்த செலவில் படகு ஒன்றை, அவர் வாங்கி கொடுத்தார். அதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

Next Story