நியாய விலை கடையில் எம்பி திடீர் ஆய்வு: தரமான பொருட்கள் வழங்க வேண்டுகோள்

நியாய விலை கடையில் எம்பி திடீர் ஆய்வு: தரமான பொருட்கள் வழங்க வேண்டுகோள்
X

ஆய்வு மேகொண்ட எம்பி விஜய் வசந்த்.

நியாய விலை கடையில் குமரி எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு தரமான பொருட்கள் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழகடியப்பட்டணம் மீனவர் கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்டு இருந்த அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் வாங்க நியாயவிலை கடையின் முன் நின்று கொண்டு இருந்த பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு பணியில் இருந்த கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!