குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.
X

பைல் படம்

குமரியின் குற்றாலமான திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது, கடந்த இரு தினங்களாக குமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதும் திற்பரப்பு அருவி தற்போது கொரோனா விதிமுறைகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் ஆள் அரவமின்றி காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் நூற்று கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு தளர்வுகள் ஏற்படுத்தி வரும் தமிழக அரசு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story