மருத்துவ குணம் கொண்ட பனை ஓலை தொட்டில்: குமரியில் டிரெண்டிங்
குமரியில் டிரெண்டிங் ஆகியிருக்கும் மருத்துவ குணம் கொண்ட பனை ஓலை தொட்டில்.
தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமரத்தின் ஒவ்வொரு பாகங்களும் வீணாகாமல் மக்கள் பயன்படும் வகையிலும் மருத்துவ தன்மை கொண்டதாகவும் உள்ளது.
பனைமரம் வாழ்க்கையில் உணவு உறக்கத்திற்கு தேவையானதாகவும், உடல் சோர்வு, வாதம், தசைபிடி, எழும்பு தேய்வு உட்பட பல்வேறு உடல், மனம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் மருத்துவ தன்மை கொண்டதாகவும் உள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் பனை பொருட்கள் குறித்த புரிதல் இல்லாததால் பனை தொழில் நலிவடைந்து பனை மரங்கள் செங்கல் சூலையில் தீ எரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பால்மா மக்கள் அமைப்பினர் உருவாக்கி உள்ள பனை ஓலை மூலம் தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தொட்டில் தற்போது டிரண்டிங் ஆகி உள்ளது. பனை ஓலை தொட்டில் வருகையால் பல்வேறு கலை அம்சங்களுடன் தயாரிக்கப்படும் தொட்டில்களின் பயன்பாடு குறைய தொடங்கி மருத்துவ குணம் கொண்ட பனை ஓலை தொட்டில்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.
தற்போது குழந்தைகளின் உடல் நலன் கருதி பெற்றோர்கள் மருத்துவ குணம் கொண்ட பனை ஓலை தொட்டில் வாங்குவதால் இந்த தொட்டில் குமரியில் வைரலாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu