தொழிலாளர் தினத்தில் தொழிலாளியை கவுரவப்படுத்திய அமைச்சர்

தொழிலாளர் தினத்தில் தொழிலாளியை கவுரவப்படுத்திய அமைச்சர்
X

குமரியில், தொழிலாளி ஒருவருக்கு பொன்னாடை போர்த்திய அமைச்சர் மனோ தங்கராஜ். 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, குமரியில் தொழிலாளியை அமைச்சர் மனோ தங்கராஜ் கவுரவப்படுத்தினார்.

உழைக்கும் தொழிலாளர்களை போற்றும் வகையில் மே 1 ஆம் தேதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிலாளர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மார்த்தாண்டம் பகுதியில் சாலையோரத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கவுரவித்தார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியை கண்டு காரில் இருந்து இறங்கி சென்று அவரை சந்தித்து பொன்னாடை போர்த்திய அமைச்சரின் இந்த செயல், பலரின் பாராட்டை பெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!