குமரியில் மகா சிவாலய ஓட்டம்: லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

குமரியில் மகா சிவாலய ஓட்டம்: லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
X

குமரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெற்றது.

குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க மகா சிவாலய ஓட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது.

சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கும் வகையில் நடைபெற்று வரும் இந்த சிவாலய ஓட்டம் குமாரியின் பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. 12 சிவாலயங்களுக்குள் நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் ஆனது முதல் சிவாலயமான முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும்.

எந்த காலத்தில் இந்த சிவாலய ஓட்டம் தொடங்கியது என்பதை கணிக்க முடியாத அளவிற்கு பல நூற்றாண்டுகளை கடந்தும் நடைபெற்று வரும் இந்த சிவாலயம் ஓட்டம் சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி சைவ சமய கோவிலாக சிவன் கோவிலில் வரும் பக்தர்கள் வைனவ சமய மந்திரமான கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் சிவபெருமானை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

மூஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில் குளத்தில் புனித நீராடி காவி உடை மற்றும் ருத்திராட்சம் அணிந்து விபூதிப்பட்டை தரித்து, கையில் பனை ஓலை விசிரியுடன் சாமி தரிசனம் செய்வார்கள்.

தொடர்ந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திற்பன்றிக்கோடு ஆகிய சிவாலயங்களில் வழிபடும் பக்தர்கள் கடைசியாக 12வது சிவாலயமான திருநட்டாலம் சங்கரநாராயனர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை முபைப்பார்கள்.

110 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்தில் கால் நடையாகவும் ஓடியும் கடந்து செல்லும் சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உள்ளனர். சிவாலய ஓட்டம் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்.

சிவராத்திரி தினம் குமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதால் இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil