குமரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச்.1ம் தேதி உள்ளூர் விடுமுறை

குமரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச்.1ம் தேதி உள்ளூர் விடுமுறை
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மகா சிவராத்திரியை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.

இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 12 சிவாலயங்களை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோசத்துடன் ஓடியே சென்று வழிபடுவது வழக்கம்.

இதனிடையே மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச்.1 ஆம் தேதி செவ்வாய்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்ட தலைமை கருவூலம், கிளை கருவூலம், அவசர அரசு பணிகள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிக்கை மூலமாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil