குமரி டாஸ்மாக்கில் மது விற்பனை சரிவு..!

குமரி டாஸ்மாக்கில் மது விற்பனை சரிவு..!
X
அரசின் புதிய கட்டுப்பாடுகளால் குமரி டாஸ்மாக்கில் மது விற்பனை சரிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை இன்று வியாழக்கிழமை முதல் அமல்படுத்தி உள்ளது.

அந்த வகையில் டாஸ்மார்க் மதுக்கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது . மேலும் முகக்கவசம் அணிவது ,சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றி மது விற்பனை செய்வதோடு அதனை கண்காணிக்குமாறு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மதுக்கடை மூடப்படும் என்ற அச்சத்துடன் மது பிரியர்கள் தங்களிடம் இருந்த பணத்தில் மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையான மது விற்பனை, நேரக் குறைப்பு காரணமாக 2.15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சரிவை சந்தித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!