ஆற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது

ஆற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது
X
குமரியில் ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளில் இருந்து பெருமளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு நீர்வீழ்ச்சி, தாமிரபரணி ஆறு, கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக செல்கிறது.

இந்நிலையில் திருவட்டாறு அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற டேவிட்சன் (49) என்ற கூலி தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மாயமான நபரை தேடி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai future project