திமுக வேட்பாளரை தோற்கடித்த திமுக வேட்பாளர்: குழித்துறை நகராட்சியில் திருப்பம்

திமுக வேட்பாளரை தோற்கடித்த திமுக வேட்பாளர்:  குழித்துறை நகராட்சியில் திருப்பம்
X
திமுக வேட்பாளரை தோற்கடித்த திமுக வேட்பாளரால் குழித்துறை நகராட்சியில் திருப்பம் ஏற்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்று 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன்படி வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி மட்டும் பேரூராட்சி வார்டு உடுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் இன்று மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் தலைவர் பதவிக்கு திமுகவின் கட்சி தலைமை அறிவித்த அதிகார பூர்வ வேட்பாளருக்கு எதிராக திமுக கவுன்சிலர் பொன் ஆசைதம்பி வேட்புமனு மனு தாக்கல் செய்தார்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது, இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பொன் ஆசைதம்பி வெற்றி பெற்று நகர்மன்ற தலைவர் ஆனார். அவருக்கு திமுகவில் ஒரு பிரிவினரும், பாஜக கவுன்சிலர்களும் ஆதரவு அளித்ததாக கூறப்படும் நிலையில் கட்சி தலைமை அறிவித்தவரை புறக்கணித்து திமுகவை சேர்ந்த மற்றொருவர் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story