குமரியின் குற்றாலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி மூடல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியின் குற்றாலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி மூடல்,   சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

திற்பரப்பு நீர்வீழ்ச்சியையும் திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை 

குமரியின் குற்றாலம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி சுற்றுலா தலங்களான கடற்கரை பகுதிகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றிற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வர அனுமதி வழங்கபட்டுள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழும் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இதனால் குமரி மாவட்டத்தில் சுற்றுலா வரும் பயணிகள் ஆனந்த குளியல் இடலாம் என எண்ணி திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனிடையே அந்த பகுதியில் கடைகள் அமைத்து இருக்கும் வியாபாரிகள் பிற சுற்றுலா தலங்களை திறந்ததை போன்று திற்பரப்பு நீர்வீழ்ச்சியையும் திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself