கொரோனா கட்டுப்பாடு: குமரியில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

கொரோனா கட்டுப்பாடு: குமரியில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
X

சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் குமரி. 

கொரோனா கட்டுப்பாடுகளால், புத்தாண்டில் குமரியில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா பரவல் மற்றும் ஓமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மேலும் கன்னியாகுமரி உட்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, இன்று முதல் மூன்று நாட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் பார்வையிடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன. அதன்படி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சங்குதுறை கடற்கரை உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மாவட்டம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைந்து, போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதனால், மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளும் ஆள் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!