மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி - குமரி போலீசாருக்கு பாராட்டு

மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி - குமரி போலீசாருக்கு பாராட்டு
X

தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் நேரில் அழைத்து பாராட்டினார்.

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்ற குமரி போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் 02.05.2022 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், Triple jump போட்டிகளில் உதவி ஆய்வாளர் திலீபன் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கமும், பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், Triple jump மற்றும் 100 மீட்டர் hurdles,100 மீட்டர் ஓட்டம் போட்டிகளில் 3 தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கமும் பெற்றார்.

இதேபோல், முதல்நிலை காவலர் டேவிட் ஜான் 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கமும் பெற்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர். மேற்கண்ட தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

மேலும் உதவி ஆய்வாளர் திலீபன் மற்றும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா ஆகியோர் நெதர்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டிக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!