முகமூடி திருடர்களை பிடிக்க கேரளாவில் முகாமிட்ட குமரி போலீசார்

முகமூடி கொள்ளையர்களை பிடிக்க கேரளாவிற்கு விரைந்தது குமரி போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளை மட்டும் குறிவைத்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் குளச்சல், குறும்பனை, மணவாளகுறிச்சி, கருங்கல், நித்திரவிளை, ஊரம்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம், நகைக்கடைகள், மொபைல்கடைகள், கோவில்கள் உள்ளிட்டவற்றில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தேறின.
இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தங்களை குறித்த அடையாயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கமால் இருக்க சினிமா பட பாணியில் ஜோக்கர் முகமூடி, கையுறை, தலையில் குல்லா, குடை, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிசிடிவி கேமராக்களில் தங்களது முகங்கள் பதியாமல் இருக்க செய்தனர்.
கடைகளை உடைக்க இரும்பு கடப்பாரை, கட்டர் மிஷின் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்தனர், மேலும் குறிப்பட்ட பகுதிகளில் தொடர் செயின்பறிப்பு சம்பவங்களும் நடந்தேறி வந்தன.
போலீசார் குற்றவாளிகளை பிடிக்க அதிதீவிரம் காட்டி வந்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் திருடர்கள் தங்களது செயலை வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து செய்து வந்தனர்.
இது குமரி மாவட்ட போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வந்த நிலையில், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வரப்படுகிறது.
மேலும் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியையும் போலீசார் நாடி அவர்கள் உதவியுடனும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருடர்கள் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அனைத்து திருட்டுகளும் நடந்து முடிந்த பின் அந்த மர்ம நபர்கள் திரும்ப வந்து சேரும் இடம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்ததால் போலீசாரின் விசாரணையை நித்திரவிளையை சுற்றி தீவிரபடுத்தினர்.
அதில் அந்த மர்ம நபர்கள் நித்திரவிளை சுற்றுவட்டார கடற்கரை பகுதியை சேர்ந்த நபர்கள் எனவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை இட்டதில் அங்கிருந்து பல்வேறு இடங்களில் இருந்து திருட்டு போன பொருட்கள் பலதும் போலீசாரின் கையில் சிக்கி உள்ளதாகவும் போலீசாரின் நடமாட்டத்தை கணித்த திருடர்கள் அங்கிருந்து கேரளாவிற்கு தப்பி சென்றதாகவும் தெரிகிறது.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளதாகவும் விரைவில் திருடர்கள் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu