/* */

குமரியின் குற்றாலத்தில் வெள்ள பெருக்கு - பொதுமக்கள் வெளியேற்றம்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.

மேலும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 46 அடியை எட்டி உள்ள நிலையில், அணைக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து 3 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தடுப்பு வேலியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் மற்றும் திற்பரப்பு அருவி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 28 Sep 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...